குறுக்கது சிறுத்தவளே..!
குறுக்கது சிறுத்தவளே கூனற்பிறை நுதலே
முறுக்குமிகு காளையெந்தன் மனம் உந்தன் எழிலாலே
சறுக்குதடி நிலைமறந்து சௌந்தரியமே நீ விழியசைத்தால்
கிறுக்குஅது ஏறுதடி கிள்ளை உந்தன் நினைவாலே
முறுக்குமிகு காளையெந்தன் மனம் உந்தன் எழிலாலே
சறுக்குதடி நிலைமறந்து சௌந்தரியமே நீ விழியசைத்தால்
கிறுக்குஅது ஏறுதடி கிள்ளை உந்தன் நினைவாலே
மறுக்குதடி பால்பழங்கள் பசி தாகம் தெரியவில்லை
வெறுக்குதடி பஞ்சணையும் உறக்கமது நெருங்கவில்லை
கறுக்குதடி எந்தன்மனம் உன் கனிமுகத்தைக் காணாவிடில்
பொறுக்குதில்லை தனிமையடி பொழுதிங்கு நீண்டதடி
வெறுக்குதடி பஞ்சணையும் உறக்கமது நெருங்கவில்லை
கறுக்குதடி எந்தன்மனம் உன் கனிமுகத்தைக் காணாவிடில்
பொறுக்குதில்லை தனிமையடி பொழுதிங்கு நீண்டதடி
இறுக்கமடி என்காதல் இதை நீயும் புரிந்திடடி
அறுக்காது என் அன்பை ஆருயிரே நீ ஏற்று
நிறுத்தாது உயிர்மூச்சை என்னிதயம் நீடித்திட
நல்லதொரு பதிலதனை நயமாகத் தந்திடடி
நம் காதல் மணம் வீச மனஅரும்பை அவிழ்த்திடடி.
அறுக்காது என் அன்பை ஆருயிரே நீ ஏற்று
நிறுத்தாது உயிர்மூச்சை என்னிதயம் நீடித்திட
நல்லதொரு பதிலதனை நயமாகத் தந்திடடி
நம் காதல் மணம் வீச மனஅரும்பை அவிழ்த்திடடி.

என்னழகில் இதயம் இழந்துவிட்ட ஆணழகா!ஏறுபோல் நடையழகா! ஏங்கிடுதல் எதற்காக?மின்னிடையில் விழிபதித்தாய் விளையாடி ஏகுதற்கோ?உன்னுயிர் உள்ளவரை உடன் வாழச் சம்மதமோ?காதல் வலை விரித்துக் கட்டழகைக் கவர்ந்த பின்னேமாதென்னை மறந்து மாயமாய் மறைவாயோ?சீதனம் கேட்டுச் சீர்வரிசை எதிபார்த்துபேதையே விதியென்று பிதற்றியே போவாயோ?கிறுக்கு வரிகளிலே கிறங்குபவள் நானல்லஉறுதியுடன் நீ இருந்தால்உனக்காக காத்திருப்பேன்எமாற்ற நீ நினைத்தால்எடுத்திடுவேன்… பளார்….. பளார்.